0
வட மாகாண இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்ததப்பட்டதாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களின் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் வெடிப்பு சத்தங்களை கேட்கக்கூடியதாக இருந்ததாகவும் வெளியான தகவல்கள் பொய்யானவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடி ஏற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் இவ்வாறான அடிப்படையற்ற செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தேர்தலுக்கு பிந்திய காலப்பகுதியில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறான போலி பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று பொது மக்கள் கோரப்பட்டுள்ளனர்.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மிகவும் அமைதியான முறையில் இருப்பதாகவும் தேசிய பாதுகாப்புக்கான மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த பிரதேசங்களுக்கான பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம் அங்கு எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top