இன்றைய ஜனாதிபதி தேர்தல் எவ்வித பாரிய அசம்பாவிதங்களுமின்றி நடைபெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடைபெற்று முடிந்தவுடன், கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் பேரணிகள் செல்லவோ, பட்டாசுகள் கொழுத்தவோ வேண்டாமென அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
வாக்களிப்பு சுமூகமான நிலையில் இடம்பெற்றுள்ள நிலையில், முடிவுகள் வெளியான பின்னரும் அனைவரும் அமைதியை கடைப்பிடிக்க வேண்டுமென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment