0

அரச ஊடகம் ஒன்று பிழையான செய்தி வெளியிட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளரிற்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்து குறித்த ஊடகத்திற்கு நேரில் சென்ற தேர்தல் ஆணையாளர் செய்தியினை திருத்தம் செய்து மீள ஒளிபரப்புமாறு உத்தரவிட்டுள்ளார்.
அரச ஊடகமான இலங்கை ரூபவாஹினி கூட்டுஸ்தாபனத்தின் காலைநேரச் செய்தியில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி மஹிந்த ராஜபஷவிற்கு ஆதரவளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தான் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டதாக குறித்த ஊடகம் போலிப்பிரசாரம் செய்வதாக சஜித் பிரேமதாச தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு வழங்கினார்.
இந்த முறைப்பாட்டினை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையாளர் ரூபவாஹினி கூட்டுஸ்தாபனத்திற்கு நேரில் சென்று செய்தினை மீள்திருத்தம் செய்து ஒளிபரப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய தவறான செய்தியை வெளியிட்டமைக்காக மன்னிப்புக் கோரிய ரூபவாஹினி கூட்டுஸ்தாபனம் சஜித் பிரேமதாச கட்சி தாவவில்லை என செய்தியை திருத்தி ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top