நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலினைத் தொடர்ந்து "தேர்தல் வெற்றியும் நாங்களும்" எனும் தலைப்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் மக்கள் சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் (09) மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிகமான வாக்குகளை அளித்து இந்த வெற்றிக்காக பங்களிப்பு நல்கிய காத்தான்குடி மக்களுக்கு நன்றி தெரிவிக்குமுகமாகவே இவ்வாறு ஜும்ஆ தொழுகையின் பின் ஜாமிஉல்லாபிரீன் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் நல்லாட்சிக்காக தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரகுமான், முஸ்லிம் காங்கிரஸ் கொள்கைப்பரப்பு செயலாளர் யு.எல்.எம்.என்.முபீர், ஐக்கிய தேசிய கட்சியின் காத்தான்குடி அமைப்பாளர் முஸ்தபா ஆகியோரும் மேலும் மக்கள் பிரதிநிதிகள் பலரும் இதன்போது கலந்து கொண்டு நன்றி தெரிவித்து உரையாற்றினார்கள்.







Post a Comment