நேற்று வரை ரணில் விக்கிரமசிங்கவை பலமாக விமர்சித்து வந்த ரூபவாஹினி இன்று காலை முதல் அவரது புகழ் பாட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஆட்சி மாற்றத்தின் போது தமது பதவிகளை இழந்தவர்கள் தற்போது தமது தருணத்திற்காக காத்திருப்பதாக தகவல் அறியமுடிகிறது.
ஒவ்வொரு ஆட்சி மாறும் போதும் அந்த ஆட்சியாளர்களுக்கு சார்பானவர்களே அரச ஊடகங்கள் மற்றும் இலாகாக்களில் நியமிக்கப்படுவதும் பின் அடுத்த கட்சி ஆட்சிக்கு வரும்போது இவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் பல காலமாக இலங்கை வரலாற்றில் தொடர்ந்து வரும் விடயமாகும்.
இந்நிலையில், நேற்றுவரைக்கும் தம் கைவசம் வைத்திருக்கும் முஸ்லிம் தலைவர்களின் படங்களைத் தொடர்ச்சியாக உபயோகித்து அவர்கள் பெயரில் தினம் தினம் செய்திகள் வெளியிட்டு வந்த தினகரன் பத்திரிகை ஊழியர்களிடமும் இந்த பதட்டம் ஆரம்பித்துள்ளதாக அறியமுடிகிறது.
பெரும்பாலும் ஏ.எச்.எம் அஸ்வர், ஏ.எச்.எம். பௌசி, அலவி மௌலானா போன்றோர்களின் பெயர்களில் இங்கு வெளியிடப்படும் விடயங்கள் குறித்து அவர்கள் தமக்கு என்னவென்றே தெரியாது என பல தடவைகள் சுட்டிக்காட்டியிருந்த போதும் தாம் அரசின் அங்கம் என்பதால் அவற்றை நிராகரிக்காது விட்டுவிடுவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment