மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரது வெற்றிக்கு மிகப்பெரும் பங்காற்றிய மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் எமது ஆதரவாளர்கள் எதிர் கட்சிகள் பாதிப்புக்கு உள்ளாகாத வகையில் வன்முறைகளில் ஈடுபடாது அமைதிகாக்குமாறு வேண்டுகோள்விடுக்கின்றேன்.
என மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் க.மோகன் தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றி உறுதிசெய்யப்பட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் அலரிமாளிகையை விட்டு வெளியேறியுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் க.மோகன் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் இதுகுறித்து மேலும் கூறுகையில்
மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றி எற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவரின் வெற்றிக்காக என்னுடனும் ஏனைய தமிழ் கட்சிகளுடனும் தோலோடு தோல் கொடுத்து உழைத்த கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மைத்திரிபால சிறிசேன அவர்களின் வெற்றியில் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கரங்களும் ஒன்றிணைந்துள்ளது என்பதனை ஜனாதிபதியாகும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் உணர்ந்து எதிர்வரும் காலங்களில் தமிழர்களின் நலனுக்காகவும் பாடுபடுவார் என்ற நம்பிக்கையுடன் கட்சி என்பதற்கு அப்பால் தமிழ் மக்களுக்காக தமிழ் மக்களின் தேவைகளுக்காகவும் நாம் தொடர்ந்தும் போராடுவோம் என கூறிக்கொள்கின்றேன்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்து அவரது வெற்றிக்கு மிகப்பெரும் பங்காற்றிய மட்டக்களப்பு வாக்காளர்களுக்கு எனது நன்றிகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்வதுடன் எமது ஆதரவாளர்கள் அனைவரும் எதிர் கட்சிகள் பாதிப்புக்கு உள்ளாகதவகையில் வகையில் வன்முறைகளில் ஈடுபடாது அமைதிகாக்குமாறு வேண்டுகோள்விடுக்கின்றேன் என்றார்.
Home
»
election 2015
» வாக்களித்த மட்டக்களப்பு மக்களுக்கு நன்றிகள்- ஆதரவாளர்கள் அமைதிகாக்கவும்-க.மோகன்
Subscribe to:
Post Comments (Atom)


Post a Comment