0
பாப்பரசர் பிரான்ஸிஸ், எதிர்வரும் 13ஆம் திகதி இலங்கை வரவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இராணுவத்தினர் மற்றும் பொது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொழும்பு காலி முகத்திடலில் இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.
பாப்பரசருக்கான விஷேட மேடை அமைப்புகள், கூடாரங்கள், பாதுகாப்பின் நிமித்தம் இராணுவ-பொலிஸ் காவலரண்கள், பாப்பரசரை தரிசிப்பதற்காக மக்களுக்கு விஷேட பாதைகள் என்பன அமைக்கப்பட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காலி முகத்திடலுக்குச் செல்லும் பிரதான வீதியின் ஒரு பகுதியை மறித்து இவ் ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வீதியோர வாகன தரிப்பிடங்கள் மற்றும் சிறு உணவகங்கள் அனைத்தும் அகற்றப்பட்டு, பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஜனாதிபதி தேர்தலும் பாப்பரசின் வருகையும் ஒரே மாதத்தில் அமைந்தமை தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. குறிப்பாக அவரது வருகை எந்தளவுக்கு சாத்தியமாகுமென அனைவராலும் கேள்வியெழுப்பப்பட்டது. எனினும் சுமூகமான முறையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலையடுத்து, பாப்பரசரின் வருகைக்கான ஏற்பாடுகள் துரித கதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

pop 01
pop 02 01IMG_2034pop 03IMG_2033IMG_2032

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top