0
ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்கள் பால்நிலை மாநாடு, மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் விடுதியில் வியாழக்கிழமை (18)  நடைபெற்றது.

வை.எம்சீ.ஏ. மற்றும் சேவ்த சில்;ரன் நிறுவனங்கள் இதனை ஏற்பாடு செய்தன.

மட்டக்களப்பு மாவட்ட வை.எம்.சீ.ஏ.செயலாளர் டி.டி.டேவிட் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 'பால்நிலை சமத்துவத்தை ஊக்குவித்தலும் பெண்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தலும்' எனும் தொனிப்பொருளில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.

கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.ஜெய்சங்கர்,  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் கே.கடம்பநாதன் உள்ளிட்ட பலர் விரிவுரைகளை நடத்தினர். மாவட்ட திவிநெகும திணைக்கள பணிப்பாளர் எம்.மனோகிதராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மாவட்ட மட்டத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட துறை சார்ந்த பெண்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
பெண்களின் உற்பத்தி பொருட்களும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top