மலர்ந்துள்ள 2015 ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் உலகெங்கிலுமுள்ள எம் இனிய தமிழ் மக்கள் அனைவருக்கும் எமது மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடந்த கால துயரங்கள் நிறைந்த சோகமான வாழ்வு பனி போல் மறைந்து, மலரும் புத்தாண்டு எமது மக்களுக்கு சுபிட்சமான வாழ்வையும் அமைதியையும் சமாதானத்தையும்; அள்ளி வளங்கும் ஆண்டாக விளங்க நாம் ஒவ்வொருவரும் ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.
எமது மக்களின் மனங்களில் குரோதத் தன்மைகள் அற்றுப்போகவும், விரோதங்கள் அகலவும், ஒருவரை ஒருவர் நேசித்து அன்புகாட்டும் மனப்பாங்கைப் பெறவும் பிறந்துள்ள 2015 ஆம் ஆண்டு வழி சமைத்துக் கொடுக்கவேண்டும்.
அத்துடன் எம்முடன் இணைந்து இப்புத்தாண்டினை கொண்டாடும் சகோதர பௌத்த மத உறவுகளுக்கு எமது Battifm.com குழுமத்தினர் சார்பில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்றும் மக்கள் சேவைக்காக
Post a Comment