(சித்தாண்டியிலிருந்து நித்தி )
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் மீண்டு வெள்ளம்; தொடர்ந்த வண்ணம்முள்ள பலத்த மழை காரணமாக சித்தாண்டி 2,3,4 , வந்தாறுமுலை, கொம்மாதுறை, சந்திவெளி, முறக்கொட்டன்சேனை ஆகிய தாழ்நில குடியிருப்புக்கள் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சுமார் நான்கு அடிக்கு மேற்பட்ட வெள்ளநீர் பரவியுள்ளதுடன், ஏறாவூர்பற்று , கிரான் தெற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்கள் தொடர்ந்த மழையின் காரணமாக மீண்டு வெள்ளநீர் குடியிருப்புக்களில் உட்புகும் நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்றைய தினத்திலிருந்து தொடர்ந்த மழையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டு இரவோடு இரவாக இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர்.
சித்தாண்டி - மட்டக்களப்பு பிரதான வீதியில் நான்கு அடிக்குமேல் வெள்ள நீர் பரவியுள்ளதனால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
வாழைச்சேனை - மட்டக்களப்பிற்கான போக்குவரத்து பெரும் சிரமத்தின் மத்தியில் மாற்று வழியினை பயன்படுத்தியே பொது போக்குவரத்து நடைபெறுவதுடன் , போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகள் பெரும் அசெளகரியத்திற்குள்ளாவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
''மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் இயல்புநிலையில் பாதிப்பு – வாழ்வாதார அவல நிலை மீண்டும் தொடர்கின்றது, இவ்வேளையில் உரிய அதிகாரிகள் மக்கள் தேவைகளை கருத்திற்கொண்டு விரைவாக செயற்படுவது முக்கிய தேவைப்பாடாக உள்ளது ! ''
Post a Comment