தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் வாகரை பிரதேசத்தில் சுமார் ஒன்பதனாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இடப் பெயர்வுக்குள்ளாகியுள்ளனர். இடம் பெயர்ந்த மக்கள் பிரதேசத்தின் பாடசாலைகள் மற்றும் பொதுக் கட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
இம் மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வாகரை பிரதேச செயலாளர் செல்வி.இ.இராகுலநாயகி அவர்கள் தொடர்ந்து வழங்கவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
பிரதேச சபையின் செயலாளர் சிவலிங்கம் இந்திரகுமார் இம் மக்களுக்கான அடிப்படை சுகாதாரம் மற்றும் குடிநீர், வசதிகளை தொடர்ந்தும் மேற் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இணைப்புச் செயலாளர் பொன் ரவீந்திரன், செயதியாளர் சித்தாண்டி நித்தி ஆகியோர் மக்களைப் பார்வையிடுவதையும் அவர்களுக்கான ஒரு தொகுதிப் பொருட்களை வழங்கி வைத்ததும் குறிப்பிடத் தக்கது.
Post a Comment