சிமஸ்னு)
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 27 கிராம சேவகர் பிரிவுகளிலும் அதிக அளவில் வெள்ளம் தேங்கியுள்ளதனால் பொது மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி ,ஆரையம்பதி மத்தி, செல்வாநகர் கிழக்கு மற்றும் திருநீற்குக்கேணி போன்ற தாழ்வான கிராமசேவகர் பிரிவுகளில் அதிகஅளவில் வெள்ளநீர் தேங்கியுள்ளது
ஆரையம்பதி மாவட்ட வைத்திசாலையில் வெள்ள நீர் தேங்கியுள்ளமையினால் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆலயங்கள் பொது இடங்கள் வீதிகளில் அதிக அளவில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் வீதிகளை அன்றாடம் பயன்னடுத்தும் பயனிகள் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டதுள்ளதுடன் வடிகான்களுக்கு மேலாக நீர் பரவிச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.






















Post a Comment