மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக இதுவரையில் இன்று பிற்பகல் 12.00வரையுள்ள காலப்பகுதியில் 19961 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 49 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகின்ற நிலையில் வெள்ள நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வாகரை,ஓட்டமாவடி,செங்கலடி,ஏறாவூர் நகரம்,வெல்லாவெளி,களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதன்படி 2919 குடும்பங்களை சேர்ந்த 9942 குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.அதேபோன்று 17042 குடும்பங்களை சேர்ந்த 59950 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள்,நண்பர்களின் வீடுகளில்தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாகரைப்பகுதியில் 12 இடைத்தங்கல் முகாம்களும்,ஏறாவூர் பற்றில் 16 முகாம்களும் கோறளைப்பற்று தெற்கில் 11 இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகளவானோர் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று ஆகிய பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு தற்போதைய நிலையில் சமைத்த உணவு வழங்கப்பட்டுவருவதுடன் உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.ளப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடை மழை காரணமாக இதுவரையில் பிற்பகல் 12.00வரையுள்ள காலப்பகுதியில் 19961 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 49 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து மழை பெய்துவருகின்ற நிலையில் வெள்ள நிலைமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வாகரை,ஓட்டமாவடி,செங்கலடி,ஏறாவூர் நகரம்,வெல்லாவெளி,களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இதன்படி 2919 குடும்பங்களை சேர்ந்த 9942 குடும்பங்கள் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ளனர்.அதேபோன்று 17042 குடும்பங்களை சேர்ந்த 59950 பேர் இடம்பெயர்ந்து உறவினர்கள்,நண்பர்களின் வீடுகளில்தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வாகரைப்பகுதியில் 12 இடைத்தங்கல் முகாம்களும்,ஏறாவூர் பற்றில் 16 முகாம்களும் கோறளைப்பற்று தெற்கில் 11 இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிகளவானோர் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று ஆகிய பகுதிகளே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
முகாமில் தங்கியுள்ள மக்களுக்கு தற்போதைய நிலையில் சமைத்த உணவு வழங்கப்பட்டுவருவதுடன் உதவிப்பொருட்களும் வழங்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Home
»
மட்டக்களப்பு
» 19961 குடும்பங்கள் இடம்பெயர்வு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நடவடிக்கை – மாவட்ட அரசாங்க அதிபர்
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment