0
சுனாமி பத்தாண்டு நிறைவையொட்டி வெளியாகும் கட்டுரை
26.12.2014 வெள்ளிக்கிழமை

இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் 26 டிசம்பர் 2004 ஆம் திகதி மறக்க முடியாத  ஒரு நாள்உலக சமுகத்தைஉறையவைத்த நாள்அந்த நாளை   பத்து வருடங்கள் கடந்தும் இன்றும் நினைவுகூருகின்றோம்.

இயற்கை அனர்த்தங்கள் பல.அவற்றுள் வெள்ளம் சூறாவளி மண்சரிவு சுனாமிஎன்பன இலங்கைக்கு பழக்கப்பட்டவை. 1978 இல் கிழக்கில் இடம்பெற்ற சூறாவளியும் 2004 இல் கரையோரம் பூராக  
இடம்பெற்ற சுனாமியும் 2014இல் கொஸ்லந்தை மீரியபெத்தயில் இடம்பெற்ற பாரிய மண்சரிவும் வரலாறாகிவிட்டன.அந்தளவிற்கு அவை பாரிய   அழிவையும் எச்சங்களையும் ஏற்படுத்தியிருந்தன.இவற்றில்  2004 இல்இடம்பெற்ற சுனாமியின் பாதிப்பு என்பது மிகவும் பாரியது. 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள்காவுகொள்ளப்பட்டமை இங்கு ஈண்டு  குறிப்பிடத்தக்கதுஆம் அது இடம்பெற்று பத்துவருடங்களாகிவிட்டதுஅது தொடர்பான பதிவே இங்கு தரப்படுகிறது.

அகவை பத்தில் ஆழிப்பேரலை!

இற்றைக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்றொரு தினத்தில் இடம்பெற்ற சம்பவத்தை இன்றுஉலகம் நினைவுகூருகிறதுஆம் தெற்காசியாவை உலுக்கிய ஆழிப்பேரலையே அச்சம்பவமாகும்.இந்ததுன்பியல் சம்பவத்தை  இன்று நினைத்தாலும் நித்திரை வராதோர் உள்ளனர்அதனை நேரடியாக சந்தித்தோரில் சிலர் 10வருடங்களாகியும் இன்னும் சுயநினைவுக்கு திரும்பாமலுள்ளனர் அல்லதுவழமைக்குத் திரும்பாமலுள்ளனர்.

ஆனாலும் பலர் மறந்தும் மறவாத நிலையிலுள்ளனர்இளம் சந்ததிக்கு வரலாற்றுக்கதை சொல்வதுபோன்று சொல்லிக்கொடுக்க வேண்டிய கட்டமும்  உள்ளதுஅவர்களுக்கு சுனாமி என்றால் என்ன என்றுதெரியாதுசூறாவளி   என்றால் இன்று பலருக்குத் தெரியாதுஎனவே இவை வரலாறுகள்நிச்சயம்பதியப்பட வேண்டியவை.

இந்தோனேசியா சுமாத்ராக் கடற்பரப்பில் பூகம்பம் ஏற்பட்டு 3 மணிநேரமாகியபோதிலும் இலங்கையில்அனர்த்த பிரிவினர் அதனை துல்லியமாக கூடிய  கவனத்தோடு தெரிவிக்காதமை பல்லாயிரக்கணக்கானஉயிர்களை காவுகொள்ளக்காரணமாயமைந்ததை இன்றைய தினம் மீண்டும் வேதனையோடுநினைவுகூரவேண்டியுள்ளதுஇன்று நாடெங்கிலும் ஆத்மார்த்த அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள நிலையில்இப்பத்தாண்டு நிகழ்வு அனுஸ்டிக்கப்படுகிறது.

சனிப்பெயர்ச்சி பலனும் இயற்கை அனர்த்தமா?

திங்களன்று இடம்பெற்ற சனிமாற்றமானது எமது இலங்கையில் அரசியல்ரீ தியில் திடீர்திருப்புமுனைகளைக்கொடுக்கும் என்றும் இயற்கை   அனர்த்தங்களான காற்று மழை தீ என்பவற்றினால்ஏற்படும் பூமி சம்பந்த முடைய அனர்த்தங்களும் அமையுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதிப்பு

2004 இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தின்விளைவாக ஏற்பட்ட சுனாமியினால்தென்கிழக்கு ஆசியாமற்றும் அதற்கு அப்பாலும் பல நாடுகளில் இந்தோனேஷியா இலங்கை இந்தியா  தாய்லாந்து  மாலைத்தீவு சோமாலியா  மியான்மர்  மலேஷியா  சீசெல்சு மற்றும் பல நாடுகள் பாதிக்கப்பட்டன.எனினும் இந்தோனேசியா மற்றும் இலங்கை போன்ற நாடுகள் பாரிய பாதிப்பை  சந்தித்தன.

உரியவேளையில் தெரிவித்திருந்தால் கடைசி பல்லாயிரக்கணக்கான உயிர்களாவது காப்பாற்றப்பட்டிருக்குமென்பது வெள்ளிடைமலை.
 இந்தச் சுனாமியால் உலகில் 2லட்சத்து 50ஆயிரத்து 676 பேரின் உயிர்கள் பறிக்கப்பட்டனகுறிப்பாகஇந்தோனேசியாவில் 1லட்சத்து 84ஆயிரத்து 135 பேரும் அடுத்ததாக  இலங்கையில் 38ஆயிரத்து 195பேரும்இந்தியாவில் 22ஆயிரத்து 709பேரும் தாய்லாந்தில் 5ஆயிரத்து 305பேரும் பலியாகினர் என ஆரம்பக்கட்டதகவல்கள் தெரிவித்தன.

சுனாமியால் உலகில் இரண்டாவது பாரிய அழிவைச்சந்தித்த இலங்கையை  எடுத்துக்கொண்டால்38ஆயிரத்து 195பேரில் அம்பாறை மாவட்டத்திலேயே 9051பேர் இறந்ததாக சொல்லப்பட்டதுஇரண்டாவதுகூடிய இழப்பு அம்பாந்தோட்டையிலாகும்அங்கு 4500 பேர் இறந்தனர்காலியில் 3774 பேரும்  மட்டக்களப்பில் 2975 பேரும் முல்லைத்தீவில் 2902 பேரும் என ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகின.

பின்பு இத்தொகை சற்று குறைவடைந்து 30ஆயிரத்து 45ஆக மாறியதுஅம்பாறை மாவட்டத்தின் இறப்புத்தொகையும் 5ஆயிரத்து890 ஆகியது.
மொத்தத்தில் இலங்கையில் அதிகூடிய இறப்பையும் அழிவையும் சந்தித்தது அம்பாறை மாவட்டமே.எனவே அதனை மையப்படுத்தியதாக இக்கட்டுரை  அமைகிறது.

பத்து வருடமாகியும் வீடுகிடைக்காத அவலம்!
ஆழிப்பேரலை இடம்பெற்று பத்துவருடங்களாகிவிட்டபோதிலும் பெரும்பாலும்பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுவிட்டனஅனால் இன்னும் சில இடங்களில் வீடுகள் வழங்கப்படவில்லை.






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top