0
(எரிக்)

மட்டக்களப்பு தாமரைக்கேணி வீதியில் வடிகாண் இன்மையால் என்றும் இல்லாதவாறு சில நாட்களாக பெய்த அடை மழையால் பெருவெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இவ்வீதியில் நீண்டகாலமாக வடிகாண் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இவ்வீதி மழை காலங்களில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது. 

இவ் வீதியில் இரு பிரபல்யமான பாடசாலையும், ஒரு தனியார் வங்கியும் உள்ளதால் இவற்றைச் சார்ந்தோர் இவ்வீதியைப் பயன்படுத்துவதால் இவ்வீதியில் உள்ள வெள்ளத்தால் மிகவும் சிரமப்பட்டே செல்கின்றனர். 

இவ் வீதியில் உள்ள பிரபல்ய பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதற்கு இவ்வீதியையே பயன்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top