வங்காள விரிகுடா கடலில் நேற்றுக் காணப்பட்ட தாழமுக்க பிரதேசமானது, தற்போது தாழமுக்கமாக வலுவடைந்து, அம்பாந்தோட்டையிலிருந்து கிழக்காக 400 கிலோமீற்றர் தூரத்தில் காணப்படுகிறது. இது வடக்குத் திசையில் நகர்ந்து நாட்டிலும் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் மழையை தோற்றுவிக்கும்.
முக்கியமாக கிழக்கு, ஊவா, மத்திய, வடக்கு, மேற்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை காணப்படும்.
சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலமான காற்றானது நாட்டிலும் சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் மணிக்கு 60 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வீசலாம்.

கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
தாழமுக்கமானது அம்பாந்தோட்டையிலிருந்து கிழக்காக 400 கிலோமீற்றர் தூரத்தில் வங்காளவிரிகுடாக் கடலில் காணப்படுவதனால் நாட்டை சூழவுள்ள கடல் பிரதேசங்களில் மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்கள் கொந்தனிப்பாகக் காணப்படுவதுடன் மன்னார் முதல் காங்கேசன்துறை, மட்டக்களப்பு, பொத்துவில் ஊடான காலி வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதனால் இந்தக் கடல் பிரதேசங்கள் கடும் கொந்தளிப்பாகவும் அபாயகரமானதாகவும் காணப்படும்.
க.சூரியகுமாரன்,
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களம்,
மட்டக்களப்பு

Post a Comment