ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட ஜனாதிபதித் தேர்தல் பிரசாரப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள க.மோகன் என்பவர் கடந்த நவம்பர் மாதம் 06ஆம் திகதியிலிருந்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சனிக்கிழமை (20) கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து கொண்டிருக்கும் அறிக்கைகளின் படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளராக இருந்த மோகன், கட்சி மாற்றம் என குறிப்பிடப்பட்டிருந்தது. கட்சியின் தேசிய அமைப்பாளராக ப.தவேந்திரராஜாவே இருந்து வருகின்றார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கணவனை இழந்த பெண்களுக்கும் இலவசமாக காணி தருவதாக கூறி நாவற்குடா கல்லடி பிரதேசத்திலும் மட்டக்களப்பு நகரில் உள்ள ஏனைய பலரிடமும் சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெற்றதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கணவனை இழந்த பெண்களுக்கும் இலவசமாக காணி தருவதாக கூறி நாவற்குடா கல்லடி பிரதேசத்திலும் மட்டக்களப்பு நகரில் உள்ள ஏனைய பலரிடமும் சுமார் 7 இலட்சம் ரூபாவுக்கு மேல் பெற்றதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.
இதனையடுத்து, இது தொடர்பாக ஆராய்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் மற்றும் பணிக்குழு, ஒழுக்காற்று நடவடிக்கையின் படி, மோகனை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து நீக்கியது.
சமூகம் சார்ந்த உயர் சிந்தனையுடன் செயற்படும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், கட்சியில் இருந்து கொண்டு தமிழ் சமூகத்துக்காக வேலை செய்வதாகக் கூறிக்கொண்டு, அத்தமிழ் சமூகத்தை ஏமாற்றி ஊழல் புரிந்த காரணத்துக்காக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டதுடன், மக்களால் பொலிஸாரிடன் முன் வைக்கப்பட்ட பல முறைப்பாடுகளும் உள்ளன.
இது போன்ற நபர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் ஒப்பிட்டு செய்தி வெளியிடுவதனை, ஊடகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் தமது குற்றங்களை மறைக்க கட்சிமாறும் தரங்கெட்ட அரசியல் தலைமைகளை எப்போதும் மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
வாழ்க தமிழ் என்று கோசமிட்டு தழிழருக்கு தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட இடம் கொடுக்காத மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கப் போவதாக மோகன் குறிப்பிட்டுள்ளது எமக்கு வேதனையினைத் தருகின்றது. தமிழருக்கு குரல் கொடுப்பதாக கூறும் மோகன், தமிழருக்கு குரல் கொடுப்பதாக இருந்தால், இவ்வாறு தமிழனை ஒடுக்கி மாகாணசபை முறையையே இல்லாமல் செய்யும் கூட்டத்துக்குப் பின்னால் செல்லாமல், எதுவும் செய்யாமல் தமிழர் என்று கோசமிட்டுக் கொண்டு மாந்திரமாவது இருக்கும் தமிழ் தேசியக் கூட்டடைப்புக்காவது ஆதரவு தெருவித்திருக்கலாம்.
மாறாக தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கக் கூடாது. தமிழர்களுக்கு மாகாணசபை ஆட்சியே இல்லை என்று குறிப்பிடுகின்ற பேரினவாதக் கட்சிகளான ஹெல உறுமய, ஜே.வி.பி தமிழருக்கு பெரும் துரோகத்தை செய்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து நான் பேரினவாதி என மார்தட்டும் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரிப்பது, கிழக்குத் தமிழருக்கு செய்யும் பாரிய துரோகம் என்பதையும் கிழக்குக்கும் கிராமப்புங்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே தமிழ் மக்கள் இம்முறை ஆதரிப்பார்கள் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது
Post a Comment