மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பழமை வாய்ந்த புனித மிக்கேல் கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவன் இன்று (24) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக தமது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.
குறித்த பாடசாலையின் அதிபர் திருமதி. சீ.எஸ். மாசிலாமணி நாளையுடன் ஓய்வேபெறவிருக்கும் நிலையில் இன்று கல்லூரியின் அனைத்து பொறுப்புக்களையும் புதிய அதிபர் அருட்தந்தை எக்ஸ்.ஐ.ரஜீவனிடம் ஒப்படைத்திருந்தார்.
கடந்த மூன்றரை வருடங்களாக குறித்த கல்லூரியின் ஆசிரியராக கடமையாற்றிய அருட்தந்தையர் , கடந்த ஆடி மாதம் முதல் பிரதி அதிபராக கடமையாற்றியிருந்தமையும், நாவற்குடா தூய சின்ன லூர்த்து அன்னை ஆலய பங்கு திருச்சபையின் பங்குத்தந்தையாக சேவையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment