வாகரை வடக்கு பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பொதுக் கட்டடங்களில் தஞ்சம்மடைந்திருக்கும் மக்களை நேற்று மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் குழுவினர் பார்வையிட்டனர்.
வாகரை பிரதேச பிரிவில் பல பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியிருந்த நிலையில் அவசர அவசரமாக மீட்புப் பணிகள் இடம்பெற்று மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
உடமைகளை இழந்த நிலையிலும் உறங்குவதற்கு கூட படுக்கை விரிப்புக்களும் இல்லாமல் கரைசேர்ந்த மக்களுக்கு உடனடியாக தேவையான அத்தியாவசியப் பொருட்கள் பிரதேச செயலகத்தினூடாக வழங்கி வைக்கப்பட்டது.
மீள் குடியேற்ற பிரதி அமைச்சரின் அவசர நிவராண பணிக்குழு உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை கேட்டறிந்து அவ்விடத்திலே வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பிரதியமைச்சரினால் வெற்சீட் மற்றும் பாய் என்பன வளங்கிவைக்கப்பட்டது.
வெருகல் மற்றும் கதிரவெளி மக்கள் வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்ட நிலையில் மழை மற்றும் வெள்ளத்தின் இக்கட்டான நிலையில் பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதன் மக்களின் உணவு மற்றும் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து தமது நிவராண வாகனத்தில் கொண்டு சென்ற பாய் மற்றும் படுக்கை விரிப்புகளை வழங்கியதுடன் மக்களின் பாவனைக்கு விரைவாக பகிர்ந்தளிக்குமாறும் தேவையான உதவிகனை தம்மிடம் தொடர்பு கொண்டு கேட்டறியுமாறும் பிரதியமைச்சர் மக்களிடம் தெரிவித்தார்.
இப்பாடசாலையில் 209 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்ட நிலையில் சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டுவருகின்றது.
வெள்ளம் மற்றும் மழை நீரினால் நிரம்பி வழியும் பால்சேனை மற்றும் அண்மித்த பிரதேசங்களிலுள்ள பொது மக்கள் பால்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பிரதேச செயலகத்தினால் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கை குழந்தைகளுடன் பெய்கின்ற மழையனால் பெரும் அவதிப்படும் தாய்மார்கள் மற்றும் வயோதிவாகள் என 493 குடும்பங்கள் தங்கவைப்பட்டுள்ளனர்.
வம்மிவட்டவான் மற்றும் கண்டலடி,வாகரை மத்தி, தட்டுமுனை, ஊரியன்கட்டு போன்ற இடங்களிலும் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
Post a Comment