0
மட்டக்களப்பு மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலைப்போல் வாத்துச் சின்னத்துக்கு வாக்களித்து செல்லாக்காசாக வாக்கை பயன்படுத்தியதை விட நடைபெறப்போகும் தேர்தலில் வாத்துச் சின்னத்துக்கு வாக்களிக்காமல் விடுவதுதான் சால சிறந்தது என ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 

சித்தாண்டி-1 கிராமசேவையாளர் பிரிவிலுள்ள கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நடைபெற்ற வாழ்வாதார மேன்பாட்டுக்கான 7இலட்சம் பெறுமதியான நிதியினை தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிவைத்தபோதே இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் கருத்துதெரிவிக்கையில், இம்முறை மட்டக்களப்பு தமிழ் மக்கள் அதிகூடிய அளவில் வாக்களிக்கவேண்டும், முஸ்லிம் மக்கள் வாக்களிகாததைப் பற்றி உங்களுக்கு தேவையில்லை. ஏன் என்றால் நாங்களெல்லாம் யுத்தம் என்ற பிரச்சினையில் மாட்டிக்கொண்டிருந்தபொழுது அவர்கள் இந்த நிறைவேற்று அதிகாராம் கொண்ட முறைமையைப் பயன்படுத்தி அபிவிருத்தி கண்டவர்கள். அவர்களின் அரசியல் முறைமைகள் வேறுவிதம். ஆதலால் நீங்கள் அனைவரும் எதிர்வரும் 8ம் திகதி அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷாவிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதன் மூலம் எமக்குத் தேவையான உரிமைகளை உரிமையோடு பெறமுடியுமெனவும் குறிப்பிட்டார்.     

நடைபெற்ற இந் நிகழ்வில் தெரிவுசெய்யப்பட்ட சுயதொழில் பயனாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டிருப்பதை படங்களில் காணலாம். 



Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top