0
(த.லோகதக்சன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த மழை காணரமாக வாகரைப் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு 23899 பேர் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வருகின்றனர் என வாகரை பிரதேச செயலக வாட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

இவர்களின் இடைத்தங்கல் முகாம்களில் 1864 குடும்பங்களில் 6333 நபர்களும், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டின் 5247 குடும்பங்களில் 17566 நபர்கள் தஞ்மடைந்து வாழ்ந்து வருகின்றனர். வாகரைப் பிரதேசத்தின் உப்பாறு வாவி நிரம்பி பெருக்கெடுத்துள்ளதால் வாவியினை அண்டிய கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்துள்ள நிலையில் குறித்த பகுதியினுள் வாழும் மக்கள் இடம்பெயர வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த வகையில் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் புணாணை பாடசாலையில் 25 குடும்பங்களில் 66 பேரும், வட்டவான், இறாலோடை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 23 குடும்பங்களில் 66 பேரும், மாங்கேணி, மாவடியோடை தேவாலயத்தில் 32 குடும்பங்களில் 100 பேரும், கிருமிச்சை பாடசாலை கட்டடத்தில் 28 குடும்பங்களில் 79 பேரும், பனிச்சங்கேணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 10 குடும்பங்களில் 41 பேரும், சல்லத்தீவு பாலர் பாடசாலைக் கட்டடத்தில் 14 பேரும், பனிச்சங்கேணி பாடசாலை கட்டடத்தில் 32 குடும்பங்களில் 100 பேரும், ஊரியன்கட்டு பாடசாலை கட்டடத்தில் 365 குடும்பங்களில் 1265 பேரும், வாகரை கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 18 குடும்பங்களில் 57 பேரும், அம்பந்தனாவெளி, வம்மிவட்டான் பாடசாலைக் கட்டடத்தில் 562 குடும்பங்களில் 1854 பேரும், பால்ச்சேனை பாடசாலைக் கட்டடத்தில் 408 குடும்பங்களில் 1383 பேரும், புச்சாக்கேணி கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 71 குடும்பங்களில் 211 பேரும், கதிரவெளி பாடசாலைக் கட்டடத்தில் 204 குடும்பங்களில் 713 பேரும், ஆண்டான்குளம் கிராம அபிவிருத்திச் சங்கக் கட்டடத்தில் 70 குடும்பங்களில் 246 பேரும், கட்டுமுறிவு பாடசாலைக் கட்டடத்தில் 25 குடும்பங்களில் 81 பேரும் தஞ்சமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

இன்னும் மழை நீடிக்குமாயின் மேலும் பலர் இடம்பெயரக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகவும், இதனால் தங்களுடைய உடைமைகள் என்பன சேதமாக்கப்படுவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்தோடு இப்பகுதியில் வேளான்மை செய்கை மற்றும் சேனைப் பயிர்ச் செய்கை என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top