(சித்தேஸ்)
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவு கோருமுகமாக மட்டக்களப்பு மாநகர சபையில் மாநகர ஆணையாளர் திரு.மா.உதயகுமார் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு காலை 9.25 – 9.27 மணிக்கு இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆணையாளர் உரையாற்றுகையில் சுனாமி அனர்த்தத்தினால் மொத்தமாக 230,000 பேர் உயிரிளந்துள்ளதாகவும் அதில் இலங்கையில் 35,322 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தினுள் 2800 பேரும் மாநகர எல்லைக்குள் 1472 பேரும் உயிரிளந்துள்ளதாகவும் தெரிவித்தார். 2004ம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட வேளையில் அரசாங்க உத்தியோகத்தர்களின் வினைத் திறமையாக செயற்பாடு பாராட்டத்தக்கதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
தற்பொழுது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு அசாதாரண சூழ்நிலையில் உள்ளதனால் மாநகர சபையில் உள்ள அனர்த்த முகாமைத்துவப் பிரிவு 24 மணிநேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாவும் தெரிவித்தார்.
Post a Comment