0
வெள்ளப் பாதுகாப்பு அணை உடைப் பெடுத்துள்ளதால் மூதூர் பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேருவில பிரதேசத்திலுள்ள ‘வெள்ளம் தாங்கி’ என்னும் பகுதியிலேய இரவு 11.00 மணியளவில் பாதுகாப்பு அணை உடைப்பெடுத்துள்ளதாக தெரிய வருகிறது.

1958ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்திற்குப் பின்பு மூதூர் மற்றும் சேருவில பிரதேசத்தின் சில பகுதிகளை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் நோக்கில் பாரிய அணையொன்று சுமார் 60 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவ்வெள்ளப்பாதுகாப்பு அணையே தற்போது உடைப்பெடுத்துள்ளது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top