0
படகு கவிழ்ந்து ஒருவரைக் காணவில்லை - 8 பேர் தப்பினர்ஏறாவூர் - சவுக்கடி கடலில் ஒன்பது மீனவர்கள் சென்றிருந்த படகு கவிழ்ந்ததில் மீனவ இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார். 

இன்று (18) வியாழக்கிழமை காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஏனைய எட்டுப்பேரும் நீந்தி தெய்வாதீனமாக உயிர்தப்பியுள்ளனர். 

ஏறாவூர் ஐயங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த கந்தசாமி சிறிதரன் என்ற இளைஞரே காணமற்போயுள்ளதாக பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர். இவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றுவருகின்றன. 

கரை வலையொன்றை கடலில் விரித்துக்கொண்டிருந்தவேளை பாரிய அலையில் சிக்கி வள்ளம் கவிழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் குறிப்பிட்டனர். 

கிழக்கில் தற்போது சீரற்ற காலநிலை நிலவுவதனால் கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top