நேற்று (27.12.1014) வெளிவந்த 2014ம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதரப்பத்திரப் பரீட்சை முடிவு கிடைத்ததும் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவியான மட்டக்களப்பு கொக்குவிலைச் சேர்ந்த செல்வி. சிறிக்குமார் அபிநயா என்பவர் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்டார்.
இவர் மட்/புனித சிசிலியா பெண்கள் பாடசாலையின் விஞ்ஞானப் பிரிவு மாணவியாவார். குடும்பத்தில் இரண்டு பிள்ளைகளில் ஒரே பெண் பிள்ளையான இவர், உயர்தரப் பரீட்சையில் அதிக எதிர்பார்ப்புக்களுடன் தோற்றியிருந்தார். நேற்று (27.12.2014) மாலை முடிவு தெரியவந்ததும் அதனை ஏற்க முடியாமல் இம் முடிவுக்கு வந்துள்ளார்.
இவ்வாறான முடிவுகளின் விளைவுகளைத் தவிர்க்க, பரீட்சை முடிவினை ஏற்றுக்கொண்டு அடுத்த முயற்சியில் மாணவர்களைத் தயார்ப்படுத்துவதும், அடுத்த இரண்டு அமர்வுகளில் தமது இலக்கை அடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதனையும், வெளிவாரி மற்றும் வேறு தெரிவுகள் மூலம் வாழ்வின் இலக்கை அடையமுடியும் என்பதனையும் பாடசாலை சமூகமும், உறவினர்களும் மாணவர்களுக்கு கற்றுத்தரவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Post a Comment