0

2014ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப்பொது தராதர உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள், இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் சனிக்கிழமை வெளியிடப்பட்டன.

இந்த முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் யாழ். இந்து கல்லூரி மாணவன் பாக்கியராஜ் தாருகீஷன், கணிதப் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார்.

கணித, விஞ்ஞான, வணிகம் மற்றும் கலை பிரிவுகளின் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

கணிதம்

முதலாமிடம் - யாழ். இந்து கல்லூரி மாணவன் பாக்கியராஜ் தாருகீஷன்
இரண்டாமிடம் - கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் பி. பானுக மாலிக் சில்வா
மூன்றாமிடம் - ரம்புக்கனை, பின்னவல மத்திய கல்லூரி மாணவி எம். கசுன் இமேஸா விக்கிரமசிங்க

விஞ்ஞானம்

முதலாமிடம் - மாத்தறை சுஜாதா மகா வித்தியால மாணவி எச்.ஜி.ஹிருணி உதார
இரண்டாமிடம் - காலி சங்கமமித்தை பெண்கள் கல்லூரி மாணவி டீ.வை.பி.தேவஸ்ரீநாராயணா
மூன்றாமிடம்-  திருகோணமலை, உவர்மலை விவேகானந்தா மத்திய கல்லூரி மாணவன் சிவக்குமார் இந்துஜன்

வணிகம்

முதலாமிடம் - காலி, சவுத்லேன்ட் கல்லூரி மாணவி யு.ஜி.பியூமி தனஞ்சய
இரண்டாமிடம் - பாணந்துறை பெண்கள் கல்லூரி மாணவி எஸ்.எ.ராவிந்தி சாந்தினி
மூன்றாமிடம் - கண்டி மகாமாய பெண்கள் கல்லூரி மாணவி ஜீ.எ.ஜீ.செவ்வந்தி ரத்னாயக்க

கலை

முதலாமிடம் - கொழும்பு விசாகா பெண்கள் கல்லூரி மாணவி ஷாவிந்தி நதிஷா பெரேரா
இரண்டாமிடம் - தங்காலை பெண்கள் மகா வித்தியாலய மாணவி எம்.கே.ஆயிஷா நில்மினி
மூன்றாமிடம் - நாரம்மல, மயூபாத மத்திய கல்லூரி மாணவன் கே.பி.காயத்ரி திவங்க நவரத்ன பெற்றுக்கொண்டார்.

இதேவேளை ஹொரணை தக்ஷிதா மத்திய மகா வித்தியாலயத்தில் பிரெய்லி முறையில் கல்விபயின்ற மாணவி ரித்மி அதபான்கொட களுத்துறை மாவட்டத்தில் கலை பிரிவில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள் :


Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top