0
dhoniஇந்திய கிரிக்கட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
இந்த 33 வயதுடைய வீரர் 2005ஆம் ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். தாம் விளையாடிய 90 டெஸ்ட் போட்டிகளில் 60 போட்டிகளிலும் அணிக்குத் தலைமை தாங்கி வழிநடத்தியமை அவரது சிறப்பம்சமாகும்.


மெல்பேர்ண் கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தோனியின் கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது.
ஒரு-நாள்-சர்வதேச போட்டிகளிலும், ட்வென்ரி-ட்வென்ரி போட்டிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தும் நோக்கில் தாம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். பெப்ரவரியில் ஆரம்பமாகும் உலகக் கிண்ண சுற்றுத்தொடரும் அவரது கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்திய அணிக்கு தலைமை தாங்கிய வீரர்கள் வரிசையில், அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிக வெற்றிகளைக் குவித்த பெருமை அவரைச் சாரும்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top