0
வவுணதீவு பிரதேச செயலகப்; பிரிவிற்கு உட்பட்ட இலுப்படிச்சேனை புதுமண்டபத்தடி ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் திங்கள் கிழமை (29) சுவிஸ் சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையுடன் வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் மாமன்றப் பேரவைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சி.யோகேஸ்வரனின் வேண்டுகோளிற்கு இணங்க சுவிஸ் சூரிச் சிவன் கோவில் சைவத் தமிழ்ச் சங்கத்தின் அனுசரணையுடன் கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியத்தினரால் இவ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராமசேவகர்கள் பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவர் கௌரவசி.யோகேஸ்வரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அன்பேசிவம் இணைப்பாளர் சதா ராஜன் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக இந்து மாணவர் ஒன்றியம் சமூக தொண்டர்கள் கிராமிய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ் நிகழ்ச்சித்திட்டம் வடக்கு கிழக்கு அன்பேசிவம் இணைப்பாளர் கு.குமணன் அவர்களின் கீழ் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top