மட்டக்களப்பில் அகிலன் பவுண்டேசன் அனுசரணையுடன், கதிரவன் கலைக்கழகத்தின் விழா ஏற்பாட்டில் கிரான்குளத்தில் இன்று (22) திங்கட்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது.
கிரான்குளம் சீ மூன் கார்டின் பிரதான மண்டபத்தில் கதிரவன் கலைக்கழகத்தின் ஆலோசகர் மு.தவராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இயக்குனர் இமயம் பத்மஸ்ரீ பி.பாரதிராஜா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துக்கொண்டிருக்கும் மூத்த மற்றும் வளர்ந்துவரும் முப்பது கலைஞர்ள் இதன்போது இயக்குனர் பி.பாரதிராஜாவினால் பாராட்டி, நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
மண்வாசனையினை உலகிற்கு எடுத்தியம்பிய இயக்குனர் சிகரத்திற்கு மட்டக்களப்பு கலைஞர்களால் கிராமிய கலைஞானி எனும் பட்டம் சூட்டப்பட்டு, பொன்னாடைகள் போர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் , அதன் நினைவாக நினைவுப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பில் வளர்ந்துவரும் கலைஞரான ராகுல் நாயுடுவினால் எழுதப்பட்ட ‘’உலகெலாம்’’ எனும் சர்வமதம் சார்பான ஆன்மீகத்தினை எடுத்தியம்பும் நூலின் பிரதியொன்றினை இயக்குனர் இமயத்திடம் நூலாசிரியறினால் கையளித்துவைக்கப்பட்டதுடன், மட்டக்களப்பின் மண்வாசனையினை எடுத்தியம்பும் எமது கலைஞர்களின் உருவாக்கத்தில் வெளியாகிவரும் சஞ்சிகைகள், நூல்கள் போன்றவற்றினை பிரதிகள் அதன் ஆசிரியர்களினால் இயக்குனரிடம் வழக்கிவைக்கப்பட்டது.
Post a Comment