தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில்நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே. மகேசன் தெரிவித்தார்.
இருப்பினும் அரசடியிலுள்ள மருத்து பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடரும் என்றும் தேவையேற்படின் அதன் கல்வி நடவடிக்கைகளும் பிற்போடப்படும் என்றும் பதிவாளர் தெரிவித்தார்.
ஏற்கனவே திட்டமிடப்பட்ட பரீட்சைகளுக்கான் தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த வாரத்தில் ஒரு வார கால விடுமுறை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. அதன் படி திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் இருப்பினும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மறு அறிவித்தல் வரையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் பிற்போடப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment