கல்முனை மாநகர சபையின் 2015ம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தலைமையில் இடம்பெற்ற சபை அமர்வில், குறித்த வரவு - செலவுத் திட்டம் சபை முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வரவு செலவுத் திட்டத்தை அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் வரவேற்று உரையாற்றியதுடன் முதல்வருக்கு பெரும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டனர்.
முன்னொருபோதும் இல்லாதவாறு மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு இந்த வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இதனை வெற்றிகரமாக அமுல்படுத்துவதற்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் எனவும் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.
பின் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்த வரவு - செலவுத் திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment