இந்த நிறுவனம் ஸ்கைப் ட்ரான்ஸ்லேட்டர் என்ற தொழில்நுட்பத்தின் பரீட்சார்த்த வடித்தை அறிமுகம் செய்துள்ளது. இது ஸ்பானிஷ், ஆங்கில மொழிகளிலான சம்பாஷணைகளை உடனுக்குடன் மொழி பெயர்க்கும் வசதியை கொண்டிருக்கிறது.
அதாவது, ஸ்கைப் தொழில்நுட்பத்தின் ஊடாக வீடியோவில் உரையாடும் இருவர் ஸ்பானிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசினால், ஒருவர் பேசும் வசனங்கள் அடுத்த மொழியில் மொழிபெயர்க்கப்படும்.
இது பத்து வருடத்திற்கு மேலான முதலீட்டின் பலனாகும் என மைக்ரோ-சொப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
படங்கள் நன்றி – பிபிசி

Post a Comment