வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞரின் சடலம் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு முன்பாகவுள்ள ஆற்றுப்பகுதியில் புதன்கிழமை (24) காலை மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
வீச்சுக்கல்முனையை சேர்ந்த ஞானப்பிரகாசம் விநோதன் (வயது 24) என்ற இந்த இளைஞர் சைக்கிளில் செவ்வாய்க்கிழமை (23) சென்றுகொண்டிருந்தபோது, மட்டக்களப்பு விமான நிலையத்துக்குச் செல்லும் வீதியை கடக்க முற்பட்டார்.
இதன்போது, இவரது பாதணி கழன்று விழுந்ததாகவும் அதை எடுக்க முற்பட்டபோது இவர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார். இந்த நிலையில், தேடியபோது இவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
மட்டக்களப்பு விமானப்படை நிலையத்துக்கும் மட்டக்களப்பு நகருக்கும் இடையிலான மேற்படி வீதி ஆற்றின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்கின்ற நிலையில், இந்த வீதியை மேவியதாக நீரோட்டம் காணப்படுகின்றது.
Post a Comment