0
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 2012ஆம் ஆண்டு 09ஆம் மாதம் 17ஆம் திகதி மரணமான திருமதி கோல்டன் பெஞ்சமின் சாந்தியின் வழக்கில் சம்பந்தப்பட்ட அப்போது வைத்தியசாலை பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மன்றில் ஆஜர்படுத்துமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி என்.எல்.எம்.அப்துல்லா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் முக்கிய சாட்சியான பொலிஸ் உத்தியோகத்தரை எதிர்வரும் 05ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறு நீதவான் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வயிற்று வலியால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 17ஆம் திகதி சத்திர சிகிச்சையின் பின் மரணமானதாகவும் இந்த மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும் சாந்தியின் கணவரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

தமது மனைவி மரணமானமை தொடர்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர்கள் இருவருக்கெதிராக விசாரணைகள் மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பைச் சேர்ந்த ஜேசுதாசன் கோல்டன் பெஞ்சமின் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதன் அடிப்படையில் விசாரணைகளை நடத்துமாறு குற்றப்புலனாய்ப்பிரிவு தலைமையகம் மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு அறிவித்திருந்தார்.

இக் கடிதங்கள் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த> குற்றப்புலனாய்வுப்பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர்> கிழக்கு மாகாண ஆளுநர்> கிழக்கு மாகாண முதலமைச்சர்> கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்> மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு ஆகியோருக்கு அனுப்பியிருந்தனர்.

இந்தக் கடிதத்துக்கு அமைவாக குற்றப்புலனாய்வுப்பிரிவு பணிப்பாளர்> சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காமினி மத்துகோரள> மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு விசாரணை நடத்துமாறு பணித்திருந்தார்.

சாந்தி 2012.09.11ஆம் திகதி வயிற்றில் ஏற்பட்ட வியாதி ஒன்றுக்காக சிகிச்சைக்கென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் ஒரு வார கால சிகிச்சையின் பின்னர் 17ஆம் திகதி இறந்ததாகவும் இது தொடர்பில் இரு மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்ததாகவும் அதனால் தனக்கு இது தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதாகவும் ஜேசுதாசன் கோல்டன் பெஞ்சமின் தெரிவித்திருந்தார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top