(ராகுல்)
கிறிஸ்தவர்களை மட்டுமல்ல, உலகில் உள்ள ஒவ்வொருவரையும், விஷேட விதமாக யார் யார் இயேசுவின் போதனை , அன்பு வழிபடி வாழ்கிறார்களோ அவர்களை மீட்க இயேசு பாலன் நம்மில் பிறந்தார். கிறிஸ்து பிறப்பு செய்தி எம் அனைவருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமல்லாமல் எம் ஒவ்வொருவருடைய விசுவாசத்தையும் அதிகரிக்கின்றது.
1. கடவுளால் ஆகாதது எதுவும் இல்லை
2. கடவுள் மனிதரானார் நம்மிடையே குடிகொண்டார்.
தந்தை கடவுளின் எல்லையற்ற அன்பை மனிதகுலத்துடன் பகிர்ந்துகொள்ள வந்தவர் எம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அந்த இறையன்பு சில மனிதரிடம் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா மனிதரையும் அரவனைகின்ற பண்புடையது. விஷேட விதமாக சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள், பாவிகள் பிற இனத்தவர் அனாதைகள், ஆதரவற்றவர்கள் ஏழை எளிய மக்களும் கடவுளின் அன்புக்கு இரக்கத்துக்கு உரியவர்கள் என்பதை இயேசு தம் வாழ்வில் வாழ்ந்து காட்டினார்.
இயேசுவை எம் இதயத்தில் தேடுவோம். - இடையர்கள் இஞானிகள் போல் மகிழ்ச்சி வரும்.
இயேசுவை போல பிறரை அன்பு செய்வோம். - நாமும் அன்புடன் அரவணைக்க படுவோம்.
இயேசுவாக மாறுவோம். - தோல்விகள் கூட வெற்றியாக மாறும்
முடியும்!!! எப்போது?
பிறரை அன்பு செய்து வாழும்போது
பிறரை மன்னித்து வாழும் போது
பெரியவரை மதித்து கீழ்படிந்து வாழும் போது
நமது கடமைகளை செய்து வாழும் போது
பிறருக்கு உதவி செய்து வாழும் போது
மனித நேயத்துடன் வாழும் போது
பிறர் நலம் கருதி வாழும் போது
நீதிக்கு குரல் கொடுத்து வாழும் போது
நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. யோவான் 15:12
அன்பின் வழியே இயேசுவின் வழி அவரை பின்பற்றுவோம் " அன்பே கடவுள்" என்று .
Post a Comment