ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈரளக்குள வயல் பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உழவு இயந்திரத்திற்குள் அகப்பட்டு விபத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர் .
நேற்று செவ்வாய்க்கிழமை (30) நண்பகல் வேளையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
சித்தாண்டி-4இ இரத்தின சீகாமணி வீதியில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய சித்திராமணி மகாதேவன் (வயது-36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
உழவு இயந்திரத்தை ஓட்டிச்செல்லும்போது பள்ளத்தில் உழவு இயந்திரம்; வீழ்ந்தமையினால் குறித்த நபர் சாரதி இருக்கையில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளார். இதனால் உழவு இயந்திரத்தின் டயருக்குள் அகப்பட்டவர் காயத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இறந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைக்காக செங்கலடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரேத பரிசோதனை பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்க்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment