0
மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சுமார் 6 இடைத்தங்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இப்பிரதேச கிராமசேவகர் பிரிவுகளில் வெள்ள நீர் மற்றும் மழை நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகுந்ததன் காரணமாக இம்மக்கள் இடைத்தங்கள் முகாங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

முதலைக்குடாவில் 99, மகிழயடித்தீவு 36, பண்டாரியவெளி 365, கடுக்காமுனை 55, அரசடித்தீவு 330, அம்பலாந்துறை 194 போன்ற இடைத்தங்கள் முகாம்களுக்கு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமுர்த்தி முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன் மக்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அவர்களுக்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதிக்காமல் மேற்கொள்ளுமாறும் உரிய அதிகாரிகளுடன் அறிவுரை வழங்கப்பட்டது. 

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான படுக்கை விரிப்புக்கள் மற்றும் பாய், போன்ற உடனடி அத்தியாவசிய பொருட்களை நேற்றையதினம் (23) மீள்குடியேற்ற பிரதியமைச்சர் நேரில் சென்று வழங்கிவைத்தார். 

அதுமட்டுமல்லாமல் மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் நிவாரணக்குழு மக்களுக்கான தேவைகளை கேட்டறிந்ததுடன் மக்களுக்குரிய அனைத்து தேவைகளையும் ,பொருட்;களையும் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுவருவதாக மீள்குடியோற்ற பிரதியமைச்சர் தெரிவித்தார்.





















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top