பிரதி அமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யுமாறு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
வந்துரம்ப பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடைக்கு தீ வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பில் நிஷாந்த முத்துஹெட்டிகம மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சரின் ஆதரவாளர்கள் மூவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பத்தேகம நீதவான் சந்திம எதிரிமான்ன இன்று (24) நிஷாந்த முத்துஹெட்டிகமவை கைது செய்யுமாறு பொலிஸாருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Post a Comment