0
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயமானது தொடர்ச்சியாக வர்த்தகப்பிரிவில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 17 கல்வி வலயங்களில் முதல் நிலையில் திகழ்கின்றது.

இவ்வாண்டு வெளியான வர்த்தகப்பிரிவின் பெறுபேற்றின் அடிப்படையில் 36 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பினைப் பெற்றுள்ளார்கள். 

மேலும் இவ்வாண்டில் மாணவர்கள் பெற்றுள்ள பெறுபேற்றின் அடிப்படையில் மட்/பட்/பெரிய கல்லாறு மத்திய கல்லூரியின் மாணவியான செல்வி .டீ.டிலாந்தி , மூன்று பாடங்களிலும் ஏ சித்தியினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் மூன்றாம் நிலையினையும் , அதிக இலங்கை  மட்டத்தில் 326 வது இடத்தினையும் பெற்றுள்ளார்.

மேலும் மட்/பட்/குருமண்வெளி சிவசக்தி வித்தியாலய மாணவியான செல்வி ஆர்.சனுரா மூன்று பாடங்களிலும் ஏ சித்தியினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 5 ஆம் இடத்தினையும் , மட்/பட்டிருப்பு ம . ம .வி (தேசிய பாடசாலை)  மாணவன் என்.சுஜீதாஸ் மூன்று பாடங்களிலும் ஏ சித்தியினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 7 ஆம் இடத்தினையும், மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலய மாணவியான செல்வி.எஸ்.யோபிகா  ஏ சித்தியினைப் பெற்று மாவட்ட மட்டத்தில் 10 ஆம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top