மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரியில் 2015ஆம் ஆண்டிலிருந்து கொரிய மொழிக் கற்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் தொழிநுட்பக் கல்லூரி அதிபர் ரி.ரவிச்சந்திரன், புதன்கிழமை(24) தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள 4 புதிய கற்கை நெறிகளில் கொரிய மொழிக்கற்கையும் ஒன்றாகும். மட்டக்களப்பு தொழிநுட்பக் கல்லூரியில் எதிர்வரும் 2015ஆம்; ஆண்டு 36 கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில், 29 கற்கை நெறிகள் பட்டத்தைப் பெறக்கூடிய தேசிய தொழிற் தராதரம் (NVQ) தர சான்றிதழைக் கொண்டுள்ளது. இவற்றில் 5 கற்கை நெறிகள் டிப்ளோமா தர சான்றிதழை கொண்டதாகும்.
2014ல் 32 கற்கை நெறிகள் நடாத்தப்பட்டு 1,008 மாணவர்கள் கற்கை நெறியைத் தொடர்ந்தனர். இதில் 10 புதிய கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2015ல் மேலும் 4 புதிய கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 36 கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக 1,200 மாணவர்கள் உள்ளீர்க்கப்படவுள்ளார்கள். தற்பொழுது 2,810 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த அடிப்படையில் 2015ல் ஆரம்பிக்கப்படவுள்ள 4 புதிய கற்கை நெறியில் கொரிய மொழிக்கான கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஆகவே, இக்கற்கை நெறியினை பயில விரும்பும் மாணவர்கள் க.பொ.த சாதாரண தரத்தில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் 6 பாடங்களில் சித்தியடைந்த தகைமையை கொண்டிருக்க வேண்டும் ஆர்வமுடைய மாணவர்கள் விண்ணப்பத்தை 19/01/2015க்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு தொழிநுட்பக் கல்லூரி அதிபர் ரி.ரவிச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment