0
(அன்பு) 

தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பில் திருகோணமலை வீதி இன்று (27.12.2014) போக்குவரத்திற்கு இயலாத வகையில் வெள்ள நீரில் மூள்கியுள்ளது. 

குறிப்பாக மட்டக்களப்பில் பிள்ளையாரடி தொடக்கம் தன்னாமுனை வரையான திருமலை வீதி முற்றாக நீரில் முழ்கியுள்ளது. இவ் வீதி வழியான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. இன்று காலை முதல் வெள்ள நீர் அதிகரித்து வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.


 குளங்களில் நீர் திறந்து விடப்பட்டுள்ளமையால் வெள்ள நீர் பங்குடாவெளிக் குடாவில் அதிகரித்துள்ளது. இதனால் சத்துருக்கொண்டான் வீதி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து ஏறாவூர் வரையான போக்குவரத்திற்கு திருமலை வீதியின் ஊறணி கொத்துக்குளம் மாரியம்மன் கோயில் சந்தியிலிருந்து சின்ன ஊறணி ஊடாக உள் வீதியை வாகனங்கள் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது. 

இவ் வீதியினால் சின்ன ஊறணி, பிள்ளையாரடி, கொக்குவில், சத்துருக்கொண்டான், தன்னாமுனைக் கொளணி ஊடாக தன்னாமுனையை அடையமுடியும். 

ஏறாவூர் பக்கமாக இருந்து வரும் வாகனங்களும் மட்டக்களப்பை அடைவதற்குப்  இதே வீதியை பயன்படுத்த முடியும்.

வாகனச் சாரதிகளும், பயணிகளும் வெள்ளநீர் வடியும்வரை இவ் வீதியைப் பயன்படுத்துவது பயணத்தை இலகுபடுத்தும்.




Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top