0
(சுழற்சி நிருபர்)


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவும் , " தடைகளே படிகளாக " மலர் வெளியீட்டு நிகழ்வும் பிரதேச  செயலாளர் வெ .தவராஜா தலைமையில் பிரதேச செயலக டேபா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது . 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி .எஸ் .எம் .சார்ள்ஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் , மென்கப் உதவி நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர்  டி.பகிரதன் ,மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.

 இந்நிகழ்வில் தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின், மாணவர்கள், வாழ்வோசை மாணவர்கள், ஓசானம் நிலைய மாணவர்கள், மென்கப் பாடசாலை மாணவர்கள், புகலிடம் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கலென பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அதிதிகளால் கலந்துகொண்ட   மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. இங்கு உரையாற்றிய அரச அதிபர்  சாதாரன மனிதன் செய்கின்ற அனைத்து செயல்பாடுகளையும் மிக சிறப்பாக இவர்கள் செய்கின்றார்கள், எனவே இவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதை விட மிக மிக திறனாளிகள் என்னும் சமூகத்தில் கருதப்படவேண்டும் எனவும்  குறிப்பிட்டார்.

அத்தோடு இதன்போது  அரச அதிபரினால்  "தடைகளே படிகளாக " எனும் சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது.



















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top