0
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முகமாக நிவாரணப் பொருட்களை சேகரித்து வழங்கும் பணியை கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் லயனஸ் கழகமும் இணைந்து முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் எம் சதீஸ் தெரிவித்தார்.

நடைபெறவிருக்கும் நிவாரணப்பணியில் கொடையுள்ளம் படைத்த நண்பர்கள், உறவினர்கள், ஆதரவாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் உதவும்கரங்களிடமிருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இச் சமூகப்பணிக்கு தங்களால் இயன்ற சிறு உதவிகளையேனும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

உடனடியாகத் தேவைப்படும் பொருட்கள் : 

சிறுவர்களுக்கான பால் மா, பிஸ்கட், பம்பஸ், நும்புவலை, பாய்கள், உடுதுணிகள், துவாய்கள், வெற்சீட், சவர்க்காரம், கற்றல் உபகரணங்கள், மோட்டீன், மெழுகுதிரி, தீப்பெட்டி, பொதி செய்யப்பட்ட உணவுகள்

மருந்துப்பாவனைப் பொருட்கள்: பனடோல், சித்தாலேபே, ஓமாத்திரவம், ஊறல்பொதிகள் மற்றும் குடிநீர் போத்தல்கள்.

நிவாரணப்பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இடங்கள்: 
கிழக்கு பல்கலைக்கழகம்,
வந்தாறுமூலை வளாகம்.

கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்புப் பீடம், 
மட்டக்களப்பு.

அத்துடன்;
பொருட்கள் சேகரிக்கும் நடமாடும் நிவாரணப் பணி வாகனம்

தொடர்புகளுக்கு : 
0776183797
0772283359
0777557770

உங்களின் கரங்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் வரை (01:01:2015) குறித்த இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top