(வி.ரி.சகாதேவராஜா)
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் காரைதீவுக்கிளை இன்று (26) வெள்ளிக்கிழமை சுனாமி பத்தாண்டு தின நிகழ்வை அமைப்பாளர் பி.குமாரஸ்ரீயின் ஏற்பாட்டில் நடாத்தியது.
கொட்டும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற இந் நிகழ்விலே கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், ஜனாதிபதி ஆலோசகரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டார்.
கந்தசுவாமி ஆலய விசேட ஆத்மார்த்த பூஜையிலும் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் பின்னர் அறநெறி மாணவர்கள் 100பேருக்கு கற்றலுபகரணங்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து சிறப்பித்தார்.
அவர் ஆத்மார்த்த சுனாமி ஒளிதீபம் ஏற்றுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
Post a Comment