0
வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் விஞ்ஞானப் பிரிவில் கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய மாணவன் ஏகாம்பரம் யுகேசன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் தரத்தில் சித்தியடைந்துள்ளார். 


இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினையும் தேசிய ரீதியில் ஆறாவது இடத்தினையும் பெற்றுள்ளதாகவும் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்தார். 

மாணவனின் சாதனை கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்திற்கும் கிராமத்துக்கும் வலயத்துக்கும் பெருமையை சேர்த்துள்ளதாக கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலய அதிபர் இரா.செல்வராசா தெரிவித்தார்.

பாடசாலையின் வரலாற்றில் முதல்முறையாக மாவட்ட மட்டம் தேசிய மட்டத்தில் இந்த பரீட்சை பெறுபேற்று சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் முதற் தடவையாக ஆரம்பிக்கப்பட்ட விஞ்ஞானப் பிரிவில் இருந்து முதற்தடவையாக பரீட்சைக்குத் தோற்றிய இம் மாணவன் சாதாரண தர பரீட்சையிலும் 9ஏ சித்திபெற்ற மாணவனாகும் என பாடசாலை அதிபர் இரா செல்வராசா தெரிவித்தார்.



இம் மாணவன் சாதாரண தர பரீட்சையில் 9ஏ சித்திபெற்ற மாணவனாகும். இவர் கோட்டைக்கல்லாற்றைச் சேர்ந்த ஆசிரியர் ஏகாம்பரம், பூரணேஸ்வரி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.

இம் மாணவனுக்கு WWW.BATTIFM.COM மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top