வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (31) மட்டக்களப்பு மாமாங்கத்தில் நடைபெற்றது.
மாமாங்கம் சிக்கனக் கூட்டடுறவு சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பாதிக்கப்பட்ட சுமார் 100 பேருக்கு முதல்கட்டமாக அரிசி, சீனி, பருப்பு என்பன வழங்கப்பட்டதாக, சங்கத்தின் ஸ்தாபக தலைவர் எஸ். சோமசுந்தரம் தெரிவித்தார்.
இச்சங்கமானது, சிறந்த மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு மாதாந்த உதவிப் பணம், சங்கத்தில் அங்கத்துவம் பெற்றுள்ளவர்களின் மரண செலவுக்கு தலா ரூபாய் 6,000 முதல் வழங்குவதாகவும் மற்றும் அங்கத்தவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவிகள் புரிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு சிவில் சமூகத்தின் தலைவர் எஸ். மாமாங்கராஜா, சங்கத்தின் உப தலைவர் எம். உதயகுமார், பொருளாளர் கே. வீரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
Post a Comment