(என்.ஹரன்)
நாடு பூராகவும் பெய்துவரும் அடைமழை காரணமாக நாட்டின் பல பாகங்களும் வெள்ள அபாயத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திருக்கோவில் பிரதேசத்தில் சின்னத்தோட்டம், பாலக்குடா, காயத்திரி கிராமம், வினாயகபுரம் ,மூனையூர் பகுதிகளும் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் பெரியகுளம், வாச்சிக்குடா, கோளாவில் சுனாமி வீட்டுப்பகுதி ,தீவுக்காலை, நாவட்காடு, பனங்காடு வட்டமடு ஆகிய பகுதிகளும்,
அக்கரைப்பற்று , அட்டாளச்சேனை , இறக்காமம் , நிந்தவூர் , காரைதீவு ,ஒலுவில் , பாலமுனை , பொத்துவில் பாகுதிகளிலும் தொடர்சியாக தற்பொழுதும் மழை பெய்து வருகின்றதுடன் பல விவசாய காணிகளும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
இதே நேரம் கிராமசேவை அதிகாரிகள் , சிவில் பாதுகாப்புக்குளுக்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்
குறிப்பாக ஆதிவாசிகள் கிராமமான அளிக்கம்பை பகுதிக்கான பிரதான போக்குவரத் து பாதையான சாகாமம்-அக்கரைப்பற்று வீதியின் மொட்டையாகல் பகுதியில் வீதிக்கு மேலாக வெள்ளம் வடிந்தோடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Post a Comment