மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட சந்திவெளியில் ஜனாதிபதி எதிர்வேட்ப்பாளர் கட்சி அலுவலகம் இனந்தெரியதோரால் எரிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று நல்லிரவு 12 மணியளவில் இனந்தெரியாத நபர்களினால் பெற்றோல் குண்டை எரிந்து காரியாலயத்தை சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாகவும் மேலும் தெரிவித்தனர்.
காரியலயத்திற்குள் சுமார் 16 பேர் இருந்தவேளையில் இனதெரியத நபர்கள் வருகைதந்து பெற்றோல் குண்டை எரித்ததையடுத்து பயத்தின் காரணமாக தாம் ஓடிவிட்டதாகவும் காரியலயத்தில் இருந்த எவருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லையெனவும் காரியாலய பொறுப்பாளர் தெரிவித்தார்.
காரியாலயத்தில் வைக்கப்பட்டுள்ள ஆவணங்கள் மற்றும் கதிரை மேசை போன்ற தளபாடங்கள் எரிந்து நாசப்படுத்தியிருப்பதை படங்களில் காணலாம்.
இச்சம்வம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment