இந்தோனேஷியாவின் காணாமல் போன ஏயார் ஏஷியா விமானத்தை தேடியபோது, குறைந்தபட்சம் 40 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்தோனேஷிய கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியாவின் ஒருபகுதியான போர்ணியோவுக்கு அப்பாலான ஜாவா கடற்பரப்பில் நொறுங்கிய விமானத்தின் பாகங்களுடன் மேற்படி சடலங்கள் மிதந்துகொண்டிருந்தன.
ஏ 320 -200 ஏயார் பஸ் விமானம் 162 பயணிகளுடன் இந்தோனேஷியாவின் சுரபாயாவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயிருந்தது
Post a Comment