மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவருகின்ற கனத்த மழையினால் குளங்களின் நீர் மட்டம் நிரம்பிவழிந்ததன் காரணமாக குளங்களின் வாண்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் மாவட்டத்தின் தாழ் நிலப்பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மக்களின் அன்றாட போக்குவரத்துசாலை மற்றும் மக்களின் குடியிருப்புகளில் வெள்ள நீர் உட்புகுந்ததினால் உறங்குவதற்கு கூட இடம் இல்லாத நிலையில் மக்கள் பாதுகாக்கான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வாகரை வடக்கு பிரதேச செயலக பிரிவு, கிரான் தெற்கு பிரதேச செயலக பிரிவு, ஏறாவூர்பற்று மற்றும் படுவான்கரை பகுதிகள் அனைத்திலும் இடைத்தங்கள் முகாம்கள் அமைத்து மக்களுக்கான பாதுகாப்பு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
அதிகமாக தமிழ் பிரதேசங்கள் வெள்ளம் மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாவட்டத்திலுள்ள அரசியல் பிரமுவர்கள் மற்றும் அரசாங்க தரப்பு பிரதி நிதிகள் இடைத்தங்கள் முகாம்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உட்ப்பட கட்சி நிவாரணக்குழுமத்தினர் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இடைத்தங்கள் முகாம்களை பார்வையிட்டு அவர்களின் சுகாதார பிரச்சனை, உணவுப் பிரச்சனை போன்ற குறைபாடுகளை கேட்டறிந்து தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment